RSS Subscription

Subscribe via RSS reader:
Subscribe via Email Address:
 
Featured Post

Network Marketting- பிணைய சந்தைப்படுத்தல் - Computer Tamil

Posted By Blank On 3:03 AM 0 comments
வர்த்தகம் என்பது வேகமாக வருமானம் பெறுதல் என அறியப்படுகிறது. பிணைய சந்தைப்படுத்தல் (Network Marketting) இதில் முதன்மை வகிக்கிறது.

பிணைய சந்தைபடுத்தல் கொள்கைகள் சுமார் 50 வருபாங்களுக்கு முன் ஐக்கிய அமெரிக்காவில் தோற்றுவிக்கப் பட்டதோடு முதல் வர்த்தக பிணைய சந்தைப்படுத்தல் சங்கிலி (commercial network marketing chain) 1959 ஆம் ஆண்டில் Rich DeVos மற்றும் ay VanAndel ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்டது.

இவ்விரு வர்த்தக பங்காளிகளும் ஒரு வர்த்தக நடவடிக்கைக்கு ஒரு முறை மாத்திரம் வருமானம் பெரும் மரபு ரீதியான கொள்கைகளை விரும்பாததன் காரணமாக ஒரு வர்த்தக நடவடிக்கை நடந்து முடிந்த பின்னும் தொடர்ந்து வருமானம் பெறக்கூடிய ஒரு வழியாகவே இந்த கொள்கைக்கு வித்திட்டார்கள்.

பிணைய வர்த்தகம் (Network Marketting)

இது பரந்த ஒரு வர்த்தக வலையமைப்போடு தொடர்புபட்ட நேரடி வர்த்தகத்தின் ஒரு படிவமாகும். இந்த வணிகத்தொடு தொடர்புபட்ட நபர் பொருட்களையும் சேவைகளையும் மேம்படுத்தல் (Promotion) மூலம் தரகினை பெற்றுக்கொள்வதோடு தனக்கு கீழே தொழில் புரிபவர்களின் வர்த்தகத்திலும் பங்கு பெறுவார். இது Multi Level Marketing எனவும் அழைக்கப்படுகிறது.

இன்று இந்த பூகோள வர்த்தகத்தின் மூலம் சம்பாதிக்கபடும் வருமானம் பல பில்லியன்களை தாண்டியிருக்கிறது.

Success வெற்றி

வீட்டிலிருந்தவாறே வருமானம் உழைப்பது முயற்சியும் திறனும் உடைய எவருக்கும் சாத்தியமே! எனினும் இந்த முயற்சியில் உரிய இலக்கை அடைந்து கொள்ள முடியாமலும் பலர் இருக்கின்றனர். இவர்களின் தோல்விகளின் பின்னால் பல காரணங்களும் இருக்கவே செய்கின்றன. இவர்கள் முயற்சி செய்வதற்கு மாறாக யாவும் தன்னிச்சையாக நடக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஒரு செயலை தொடங்கிய மறுகணமே பலனையும் எதிர்பார்க்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே தனது இலக்கை நோக்கி இறுதிவரை செல்லும் நாட்டத்தையும் முயற்சியையும் உடையவர்களாக இருக்கிறார்கள்.

Training பயிற்சி

வீட்டிலிருந்தே வருமானம் உழைக்கும் இந்த செயற்றிட்டத்துக்கு மேலதிக பயிற்ச்சிகள் ஏதும் அவசியமில்லை. சிறந்த உரையாடல் திறனும் உதவக்கூடிய தொடர்புகளும் போதுமானது.

Make Money With Google Adsense - Tamil Computer

Posted By Blank On 9:13 PM 0 comments
இணையத்திலுள்ள வினைத்திறன் மிக்க ஒரு சந்தைப்படுத்தல் முறையே Google Adsense ஆகும். எண்ணிலடங்கா இணைய வர்த்தகங்கள் இதனை சந்தைபடுத்தல் உபாயமாக பயன்படுத்தி நன்மை பெறுகின்றன.

Adsense இனை ஏனைய அதற்கு ஒப்பான செயற்றிட்டங்களில் இருந்து வேறுபடுத்துவது Adsense தன்னகத்தே கொண்டுள்ள அபாரமான featuresகளாகும். இது இணைய வர்த்தகர்களுக்கு நன்மையளிப்பது மட்டுமன்றி சாதாரண இணைய பயனாளர்களுக்கும் இணையம் மூலம் பணம் சம்பாதிக்க வழிவகுக்கிறது.

Google’s AdSense – இந்த இணைய சந்தைப்படுத்தல் செயற்றிட்டமானது வெற்றிகரமானதும் காலப்பொருத்தம் மிக்கதுமான விளம்பரப்படுத்தல் வழியாகும். இணையத்தள உரிமையாளர்கள் இந்த செயற்றிட்டத்தில் இணைவதன் மூலம் வாசகங்கள் (Text), படங்கள் (Images) மற்றும் நிகழ்படம் (வீடியோ) அடங்கிய விளம்பரங்களை தமது தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப Google இடம் இருந்து பெற்றுக்கொண்டு தமது தளங்களில் காட்சிப்படுத்த முடியும். Google நிறுவனம் விளம்பரங்களை பேணுகிறது. PPC (pay per click - சொடுக்குகளின் எண்ணிக்கைக்கு கட்டணம்) அல்லது PPI (pay per impression - காட்சிப்படுத்தும் எண்ணிக்கைக்கு கட்டணம் ) அடிப்படையில் விளம்பரப்படுத்துவோர் தமது வருமானத்தை பெற்றுக்கொள்வர்.

இணையத்தில் மிக வேகமாக வருமானம் பெரும் முறையாக Google Adsense முன்னிலையில் இருக்கிறது.

Google Adsense எவ்வாறு செயற்படுகிறது?

https://www.google.com/adsense/login தளத்தில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் இந்த செயற்றிட்டத்தில் இணைக்கப் படுவீர்கள். பதிவு செய்து கொண்டதன் பின்னர் google விளம்பரங்களை உங்கள் தளத்தில் காட்சிப்படுத்த நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள். உங்கள் தளத்தின் ஒரு பயனாளர் Google Adsense விளம்பரத்தை சொடுக்கும் போது உங்கள் adsense கணக்கில் ஒப்பந்த தரகுத் தொகை வரவு வைக்கப்படும்.

கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்

  1. Relativity- உங்கள் தளத்தின் சுவாரசியமான, தகவல் செறிவு மிக்க உள்ளடக்கங்களுக்கு பொருத்தமான விளம்பரங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
  2. Appearance – விளம்பரங்கள் காட்சிபடுத்தப்படும் இடமும் அவற்றின் தோற்றமும் முக்கியமான அம்சங்களாகும். பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய விதத்தில் உங்கள் விளம்பரங்களை காட்சி படுத்துங்கள். விளம்பரங்களின் எழுத்துருக்களும் அவற்றின் நிறமும் தளத்தின் உள்ளடக்க நிறத்துக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப் படுதல் அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.
  3. Traffic – அதிக வருமானம் பெற்றுக்கொள்வது உங்கள் நோக்கமாயின் உங்கள் தளத்துக்கு அதிகமானவர்களை ஈர்த்துக்கொள்வது அடிப்படை.
  4. Income –Google Adsense மூலம் முன் நிர்ணயிக்கப்பட்ட வருமான வாய்ப்புகள் இல்லை. பாவனையாளர்கள் 100$ தொடக்கம் பல 1000$ களை வருமானமாக பெற்றுக்கொள்கிறார்கள். வருமானமானது முயற்சிக்கும் திறனுக்கும் ஏற்ப வேறுபடுகிறது.
Google Adsense இணையத்தில் வேகமாக வருமானம் பெரும் ஒரு சிறந்த வழியாகும். நீங்களும் இத்செயற்றிட்டத்தில் இணைவதன் மூலம் வீட்டில் இருந்தவாறே ஒரு வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.