RSS Subscription

Subscribe via RSS reader:
Subscribe via Email Address:
 

Make Money With Google Adsense - Tamil Computer

Posted By Blank On 9:13 PM Under ,
இணையத்திலுள்ள வினைத்திறன் மிக்க ஒரு சந்தைப்படுத்தல் முறையே Google Adsense ஆகும். எண்ணிலடங்கா இணைய வர்த்தகங்கள் இதனை சந்தைபடுத்தல் உபாயமாக பயன்படுத்தி நன்மை பெறுகின்றன.

Adsense இனை ஏனைய அதற்கு ஒப்பான செயற்றிட்டங்களில் இருந்து வேறுபடுத்துவது Adsense தன்னகத்தே கொண்டுள்ள அபாரமான featuresகளாகும். இது இணைய வர்த்தகர்களுக்கு நன்மையளிப்பது மட்டுமன்றி சாதாரண இணைய பயனாளர்களுக்கும் இணையம் மூலம் பணம் சம்பாதிக்க வழிவகுக்கிறது.

Google’s AdSense – இந்த இணைய சந்தைப்படுத்தல் செயற்றிட்டமானது வெற்றிகரமானதும் காலப்பொருத்தம் மிக்கதுமான விளம்பரப்படுத்தல் வழியாகும். இணையத்தள உரிமையாளர்கள் இந்த செயற்றிட்டத்தில் இணைவதன் மூலம் வாசகங்கள் (Text), படங்கள் (Images) மற்றும் நிகழ்படம் (வீடியோ) அடங்கிய விளம்பரங்களை தமது தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப Google இடம் இருந்து பெற்றுக்கொண்டு தமது தளங்களில் காட்சிப்படுத்த முடியும். Google நிறுவனம் விளம்பரங்களை பேணுகிறது. PPC (pay per click - சொடுக்குகளின் எண்ணிக்கைக்கு கட்டணம்) அல்லது PPI (pay per impression - காட்சிப்படுத்தும் எண்ணிக்கைக்கு கட்டணம் ) அடிப்படையில் விளம்பரப்படுத்துவோர் தமது வருமானத்தை பெற்றுக்கொள்வர்.

இணையத்தில் மிக வேகமாக வருமானம் பெரும் முறையாக Google Adsense முன்னிலையில் இருக்கிறது.

Google Adsense எவ்வாறு செயற்படுகிறது?

https://www.google.com/adsense/login தளத்தில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் இந்த செயற்றிட்டத்தில் இணைக்கப் படுவீர்கள். பதிவு செய்து கொண்டதன் பின்னர் google விளம்பரங்களை உங்கள் தளத்தில் காட்சிப்படுத்த நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள். உங்கள் தளத்தின் ஒரு பயனாளர் Google Adsense விளம்பரத்தை சொடுக்கும் போது உங்கள் adsense கணக்கில் ஒப்பந்த தரகுத் தொகை வரவு வைக்கப்படும்.

கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்

  1. Relativity- உங்கள் தளத்தின் சுவாரசியமான, தகவல் செறிவு மிக்க உள்ளடக்கங்களுக்கு பொருத்தமான விளம்பரங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
  2. Appearance – விளம்பரங்கள் காட்சிபடுத்தப்படும் இடமும் அவற்றின் தோற்றமும் முக்கியமான அம்சங்களாகும். பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய விதத்தில் உங்கள் விளம்பரங்களை காட்சி படுத்துங்கள். விளம்பரங்களின் எழுத்துருக்களும் அவற்றின் நிறமும் தளத்தின் உள்ளடக்க நிறத்துக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப் படுதல் அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.
  3. Traffic – அதிக வருமானம் பெற்றுக்கொள்வது உங்கள் நோக்கமாயின் உங்கள் தளத்துக்கு அதிகமானவர்களை ஈர்த்துக்கொள்வது அடிப்படை.
  4. Income –Google Adsense மூலம் முன் நிர்ணயிக்கப்பட்ட வருமான வாய்ப்புகள் இல்லை. பாவனையாளர்கள் 100$ தொடக்கம் பல 1000$ களை வருமானமாக பெற்றுக்கொள்கிறார்கள். வருமானமானது முயற்சிக்கும் திறனுக்கும் ஏற்ப வேறுபடுகிறது.
Google Adsense இணையத்தில் வேகமாக வருமானம் பெரும் ஒரு சிறந்த வழியாகும். நீங்களும் இத்செயற்றிட்டத்தில் இணைவதன் மூலம் வீட்டில் இருந்தவாறே ஒரு வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

Post a Comment